நாம் உலமாக்களால் ஏமாற்றபடுகின்றோமா?




உலக ஆசையில் சிக்குண்டு பணத்தை தேடி அலைந்தவர்களாக நாங்கள் இன்று வாழ்கின்றோம். நாளைக்கு என்ன வருமானத்தை தேடிக்கொள்ளலாம் அதற்காக யாரை சந்திக்க வேண்டும் எங்கே போக வேண்டும் என்று பல வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கின்றீர்கள். அற்ப உலகில் அறுவது ஆண்டுகள் வாழ்வதற்கு ஒரு நாளைக்கு பல நூறு முறை சிந்திக்கும் நீங்கள்..... மரணமே இல்லாத நிரந்தர வாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திப்பதில் அலட்சியமாகவே இருக்கின்றீர்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரே!! நாங்கள் இந்த உலகில் நிரந்தரமாக வாழ வந்தவர்கள் இல்லை ஒரு வழிப்போக்கன் போல் இருந்து விட்டு மீண்டும் சென்று விடவேண்டியவர்கள். பேச்சிக்கு சொல்ல வில்லை பெருமனாரின் ஹதீஸை வைத்து சொல்கின்றேன்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
இந்த உலகில் நீ பரதேசியை போல் வாழ் அல்லது வழிப்போக்கனைப்போல் வாழ் ; (புகாரி)

பரதேசி என்றால் ஊர் விட்டு வேறு ஊர் வந்தவன் ஊர் விட்டு வேறு இடம் வந்தவன் எப்படி சுதந்திரம் இல்லாமல் வாழ்வானோ அதுபோலும் வழிப்போக்கனைப்போலும் இந்த உலகில் நீங்கள் இருங்கள் என்றார்கள்.
இன்று நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்பதை உங்கள் உள்ளத்திடம் விசாரித்துப்பாருங்கள் உங்கள் உள்ளம் 'நாம் உலகில் உள்ள அற்ப ஆசைகளுக்கு அடி பணிந்து மறுமையை மறந்து வாழ்கின்றோம்' என்று பதில் சொல்லும்.
நபித்தோழர்கள் உயிரை இழந்து நிம்மதியற்ற வாழ்க்கையை சுமந்து பசியில் பல மாதங்கள் உருண்டு இரத்தம் சிந்தி எங்களிடம் இந்த அல்குர்ஆனையும் அல் ஹதீஸையும் கொடுத்தார்கள் அவர்கள் இந்த மார்க்கத்தின் பாதுகாப்புக்காக தாங்கிக்கொண்ட வேதனைகள் சொல்லில் அடங்காது  பாலைவனத்தில் ஆறுகள் இல்லை ஆனாலும் ஸஹாபாக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. நான் இருந்து இஸ்லாம் மடிவதை விட இஸ்லாம் இருந்து நான் இறப்பது சரியானது என்று ஒவ்வொரு ஸஹாபாக்களும் நினைத்தார்கள்.

எதிரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பாதுகாப்பாக எங்களிடம் கொடுக்கப்பட்டதே நாம் இருக்கும் இஸ்லாமிய மார்க்கம். தூய்மையாக கொடுக்கப்பட்ட இம்மார்க்கத்தில் எதிரிகள் குழப்பத்தை உண்டுபன்ன நினைத்தார்கள். அதற்காக முஹம்மது(ஸல்) அவர்களின் பெயராலே இட்டுக்கட்டி மார்க்கம் இல்லாத விஷயங்களை மார்க்கம் என்று புகுத்தினார்கள் அறியாத மக்கள் அதை சரி கண்டார்கள் விளங்கியவர்கள் அதை ஓரங்கட்டினார்கள்.

 நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸைப்பாருங்கள் யார் கத்தரிக்கா சாப்பிடுகின்றாரோ அவருக்கு ஈமான் அதிகரிக்கும்  என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக ஹதீஸ் கிரந்தத்தில் பதியப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் எல்லோரும் அமல் செய்யாமல் இருந்து விட்டு கத்தரிக்காவை சாப்பிட்டால் சரி  ஈமானை அதிகரித்துக்கொண்டு சுவனம் புகுந்து விடலாம் என்று இருந்து விடுவார்கள்.  இது போல் நபியின் பெயரால் எண்ணில் அடங்காத  அளவு பொய்யாக சொல்லப்பட்டுள்ளது அவைகளில் எது உண்மை எது பொய் என்று மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

உலகத்திற்காக நீஙகள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பகுதியாவது மார்க்கத்தை தெரிந்து கொள்ள ஒதுக்குங்கள்.




சிந்திக்கும் மக்களே !! இன்று எத்தனையோ இயக்கங்கள் மார்க்கம் என்ற பெயரில் மார்க்கத்தை விற்று தங்கள் வயிறுகளை வளர்க்கின்றார்கள். அரசியலுக்கு அடிபணிந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை பகைடைக்காயாக பயன்படுத்துகின்றார்கள். சென்ற பெருநாளின் பிறையை புதன் கிழமை(07-08-2013) பார்த்தாக கின்னியா மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவர் தலைமை ஜம்மியதுல் உலமாவக்கு அறிவித்தார் அதை எற்றுக்கொள்ளாமல் கண்டது நிஜம் என்றாலும் நாங்கள் இந்த நாட்டின் சட்ட திட்டங்களை கவணித்து வரும் வெள்ளிக்கிழமை (09-08-2013) அன்று பெருநாள் கொண்டாடுவோம் என்று ஜம்மியதுல் உலமா தலைவர் சொல்கின்றார்.

நபி(ஸல்)அவர்கள் பிறையைப்பார்த்தால் பெருநாள் கொண்டாடுங்கள் என்று சொன்னார்கள் இதை மனப்பூர்வாமாக கின்னியாமாவட்டத்தில் உள்ள உலமாக்கள் ஏற்றுக்கொண்டார்கள் வியாழக்கிழமை (08-08-2013) பெருநாளும் கொண்டாடினார்கள். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் ஏமாந்து போனார்கள். அத்துடன் பெருநாள் தினத்தில் நோன்பை நோற்கச்சொல்லி மக்களை ஹராத்தை செய்ய வைத்தார்கள.; அதிலும் சில மக்கள் சந்தேகத்தில் நோற்ற நோன்பை அல்லாஹுக்காக விட்டார்கள். ஆலிம்கள் என்று சொல்வவர்களைவிட பொது மக்கள் அல்லாஹுக்கு அஞ்சி நோன்பை விட்டார்கள்.
இஸ்லாத்திற்கு மாற்றம் செய்யும் தலைமைக்கு கட்டுப்படுவது கூடாது என்பதை சில மக்கள் புரியாமலே இருக்கிறார்கள்.

இப்படி அப்பட்டமாக பிறையை பார்த்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மக்களை மடையர்கள் போன்று நினைத்து அரசியலுக்காகவும். தங்களுடை பதவிகளுக்காவும் இஸ்லாத்தின் சட்டங்களை விட்டுக்கொடுத்துக்கொண்டு வாழ்வதை இன்று நீங்களே பார்க்கின்றீர்கள்
 இப்படி நாங்கள் நம்பிக்கொண்டுள்ள தமது முஸ்லிம் தலைவர்களே வழிகாட்டுவதற்கு பதிலாக ஏமாற்றி எங்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றார்கள் என்றால் இனி நாம் யாரை நம்புவது எங்களுக்கு யார் தான் வழிகாட்டுவார்கள்?
அதற்கு அல்குர்ஆன் அழகிய பதிலை சொல்கின்றது நீ எந்த ஏமாற்றுப்பேர்வழியையும் நம்பாதே நீயே தேடி பார்த்துக்கொள் உன்னை மறுமையில் நரக நெருப்பு தீண்டக்கூடாது என்றால் உலகத்தில் உனது வாழ்வுக்காக நீ முயற்சி எடுத்து சம்பாதிப்பது போல் மறுமை வாழ்வுக்காவும் நீ மார்க்கத்தை தேடிப்படிக்க வேண்டும்.  அல்லாஹ் சொல்கின்றான்.

وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
அவர்களுக்கு இறைவனின் வசனங்கள் நினைவுபடுத்தப்பட்டால் செவிட்டுத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் விழ மாட்டார்கள் (25:73)

அல்குர்ஆனில் உள்ளது என்று சொன்னால் கூட அது உண்மையில் அல்குர்ஆன் வசனம் தானா இல்லை பொய்யாக சொல்கின்றார்களா  என்று ஆராய்ந்து தான் முஃமீன்கள் பின்பற்றுவார்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான். நீங்கள் முஃமீன்கள் என்றால் நீங்களும் ஆராய்ந்து தான் பின்பற்றவேண்டும்.
அல்குர்ஆன் அல் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையை வாழுங்கள்.
மறுமையில் நரகத்தில் இருந்து பாதுகாப்புப்பெற்று சுவனத்துக்குல் செல்ல வேண்டும் என்றால் அல்லாஹ் கூறுகின்ற அடிப்படையில் எங்களுடை வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்கள் இறைவனி;டமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் அவனை விடுத்து மற்றவர்களை பொறுப்பாளர்களாக்கி பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (6:3)

அருளப்பற்ற அல்குர்ஆன் அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டிய நபியை மற்றும் பின்பற்ற சொன்னது மட்டுமில்லாமல் வேறு பெரியவர்களை கண்மூடி பின்பற்றாதீர்கள் என்று சொல்கின்றான்.
முஸ்லிம் என்று சொல்லும் நாங்கள் கண்டிப்பாக அல்குர்ஆன் சுன்னா எப்படி சொல்கின்றது  என்பதை மாத்திரம் படித்து நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

தலைவர்கள் இன்று எப்படி நடுத்தெருவில் நிக்க வைத்துள்ளார்களோ அதே போல் அவர்களை பின்பற்றி அல்குர்ஆன் சுன்னா என்ன சொல்கின்றது என்பதை பார்க்காமல் அவர்கள் உலமாக்கள் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து உலகில் வாழ்ந்தால் எங்கள் மறுமை வாழ்க்கை நாசம் தான். அல்லாஹ் வர்ணித்துக்காட்டுகின்றான்.

அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹுக்கு கட்டுப்பட்டிருக்கக்கூடாதா? இத்தூதருக்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக்கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம்.  அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். (33:66)

 உலகில் நம்முடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு பெரிய ஆலிம்கள் சொல்வதை கேட்டுவிட்டு அது
உண்மையா? பொய்யா? என்பதை பார்க்காமல் அப்படியே பி;ன்பற்றி வாழ்ந்தால் மறுமையில் வேதனை செய்வதாக மேலே இறைவசனம் சொல்கின்றது.

இது வரை உலகில் கண்டதே காட்சி கொண்டதே கோளம் என்று வாழ்ந்திருப்போம் மார்க்கம் என்று எவன் சொன்னாலும்  அதை கண்மூடி ஏற்றிருப்போம். ஆனால் அது நம்மை நரகில் கொண்டுபோய் சேர்த்திடும் என்பதை அல்லாஹ்வின் வசனம் நம்மை எச்சரிக்கின்றது.

தப்லீக் , தவ்ஹீத் என்று அல்லாஹ் பார்க்கமாட்டான் நான் சொன்ன வழியில் நீ வாழ்ந்தாயா? என் தூதர் வழியில் வாழ்ந்தாயா ? என்று தான் அல்லாஹ் கேட்பான். தலைவர்கள் சொல்வதுதான் சரி என்று கண்மூடி ஏமாந்து போகாமல் எப்படி பிறை பார்த்தால் மறுநாள் பெருநாள் என்பதை கின்னியா மாவட்ட ஜம்மியதுல் உலமா நடைமுறைப்படுத்தி தங்களுடைய கொள்கையை உருதி செய்தார்களோ அதே போல் நாமும் நமது ஊர் மக்களும் மார்க்கத்தைப்படித்து எது உண்மை எது பொய் என்பதை கணக்கிட்டு மறுமையில் சுவனத்தை அடையவேண்டும்.

உங்களுடை மார்க்கத்தின் தரத்தை அறிந்து கொள்ள உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி கேட்டு முடிக்கிறேன்.
பெருநாளைக்கு நீங்கள் அணிவதற்கு ஆடையை கடையில் தேடிப்பாத்திரிக்கின்றீர்களா?..
 தொழுகையில் எப்படி ருகூஉ செய்ய வேண்டும் என்ற ஹதீஸை நீங்கள் பார்த்திரிக்கின்றீர்களா?
தொடரும்...
NAFLY D.I.SC

Popular Posts