www.sltjweb.com

மாளிகாவத்தையில் விஸ்வரூபம் மற்றும் ரிஸானா விவகார விளக்கப் பொதுக்கூட்டம்


SAM_2890ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் நேற்று (31.01.2013) கொழும்பு மாளிகாவத்தை  ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் ‘விஸ்வரூபம் மற்றும் ரிஸானா விவகார விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. கூட்டம் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோதரர் பாயிஸ் (Dip in Sc) அவர்கள் தலைமையில் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. ஆரம்பமாக ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் பொதுக் கூட்டத்தின் கருப்பொருளை சிங்கள மொழியில் தெளிவாக விளக்கினார்கள். அடுத்து ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் “ரிஸானா அநீதி இழைக்கப்பட்டவளா?” எனும் தலைப்பின் உரை நிகழ்த்தினார்கள். அதையடுத்து ஜமாஅத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின் எம்.ஐ.எஸ். ஸி அவர்கள் “விஸ்வரூபம்: நிழலும் நிஜமும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அத்தோடு, விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டால் படத்தை தடைசெய்யும் வரை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபதத் தயாரா? என்று கேர்கப்பட்ட போது அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் வருவோம் என வாக்களித்தனர்.  இறுதியாக சகோதரர் பாயிஸ் (Dip in Sc) அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
SAM_2887 SAM_2891 SAM_2895 SAM_2897 SAM_2898 SAM_2900 ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

Popular Posts