குர்பானியின் சட்டங்கள்
அப்பாஸ் அலீ , மதுரை யார்மீது கடமை ? இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும். முக்கியமான சுன்னத் குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது. حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ...