www.sltjweb.com
நேற்று (26.01.2013) அசர் தொழுகையை
தொடர்ந்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் பெண்களுக்கான விசேட
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின்
எம்.ஐ.எஸ்.சீ அவர்கள் “நங்கையரே நரகத்தை அஞ்சிடுவீர்” எனும் தலைப்பில் உரை
நிகழ்த்தினார். அதையடுத்து சகோதரி சல்மா சபீர் (இலாஹிய்யா) “இல்லத்தை
இஸ்லாமிய மயமாக்குவோம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக
மக்ரிப் தொழுகை முதல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்விகளுக்கு
சகோதரர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.சீ அவர்கள் பதிலளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
