www.sltjweb.com
குளியாப்பிடியவில் விநியோகிக்கப்பட்ட இனவாத துண்டுப் பிரசுரங்கள்
குளியாப்பிடியவில் விநியோகிக்கப்பட்ட இனவாத துண்டுப் பிரசுரங்கள்
கடந்த
24-01-2013 ஆம் திகதி குளியாப்பிடிய எனும் நகரம் இனவாத சக்திகளின் இலக்காக
மாரியது. ஹெல சிஹல ஹிரு எனும் பௌத்த இனவாதப் பிரிவினால் இனத்துவேச
கோஷங்கள் சகிதம் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்தப்பட்டது. சரியாக காலை 10.30
மணியளவில் குளியாப்பிட்டிய பஸாரிலிருந்து ஆரம்பித்த எதிர்ப்பு ஊர்வலம்
குளியாப்பிடிய சந்தை வரை வந்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பியது.


25
பொது மக்கள் 35 பிக்குமார் சகிதம் நடாத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்திற்கு
சுமார் 55 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு அளித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தினை அஸ்வெத்தும விஹார வெதஹாமுதுரு என்பவர் முன்னின்று
வழிநடாத்தினார். இவ்வெதிர்ப்பு ஊர்வலத்தின் போது ஹலால் சான்றிதழை கண்டித்து
பேனர்கள் சுமந்த வண்ணம் ஆர்ப்பாட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். 
அத்தோடு வெள்ளை நிறத்தில் பொம்மை செய்து அதன் மீது அல்லாஹ் என்று எழுதி
ஆர்ப்பாட்ட நிறைவில் அதனை தீயிட்டு கொழுத்தினர். மேலும் ஒரு பன்றியை
வரைந்து அதன் மீதும் அல்லாஹ் என்பதை அரபியில் எழுதி சுமந்து சென்றனர்.
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் விதமான நடத்தைகளில் இவ்வார்ப்பாட்டக்
காரர்கள் ஈடுபட்டதோடு கீழ் காணும் துண்டுப் பிரசுரங்களையும் பொது
மக்களுக்கு விநியோகம் செய்தனர்.