“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து 21.01.2013ம் திகதி தமிழ்நாட்டில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் இலங்கை அரசாங்கம் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படத்தை இலங்கையில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது.
இப்படிக்கு
ஆர்.அப்துர் ராஸிக்
செயலாளர்
(ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)
http://www.sltjweb.com/2013/
- Get link
- X
- Other Apps